பள்ளி மாணவிகள் மூன்றாம் வகுப்பிற்கு மேல் படிக்க தலிபான்கள் தடை: அறிக்கை
கடந்த ஆண்டு தலிபான்கள் கல்வி கற்பதற்கு அனுமதி அளித்த ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவர் ஒருவர், 10 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் பள்ளிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்று கூறினார்.
ஆப்கானிஸ்தானின் சில மாகாணங்களில் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் ஆரம்பப் பள்ளி வகுப்புகளுக்குச் செல்ல உள்ளூர் தாலிபான் அதிகாரிகள் தடை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கஜினி மாகாணத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் குறுகிய கால பயிற்சி வகுப்புகளின் முதல்வர்களிடம், "10 வயதுக்கு மேற்பட்ட எந்தப் பெண்ணும் ஆரம்பப் பள்ளிகளில் படிக்க அனுமதிக்கப்படுவதில்லை" என்று தலிபான் ஆளும் கல்வி அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறியதாக பிபிசி பெர்ஷியன் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு தலிபான்கள் கல்வி கற்பதற்கு அனுமதி அளித்த ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவர் ஒருவர், 10 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் பள்ளிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்று கூறினார். சில மாகாணங்களில், "பிரசங்கம் மற்றும் வழிகாட்டுதலுக்கான அமைச்சகத்தின்" உள்ளூர் அதிகாரிகள் வயது அடிப்படையில் பெண்களைப் பிரித்துள்ளனர், மூன்றாம் வகுப்பிற்கு மேல் உள்ள மாணவிகளை வீட்டிற்கு அனுப்புமாறு அதிகாரிகள் பெண்கள் பள்ளியின் தலைமை ஆசியர்களை கேட்டுக் கொண்டதாக அறிக்கை கூறுகிறது.