FIFA மகளிருக்கான கால்பந்தாட்ட போட்டி : ஜப்பான் அணி வெற்றி

FIFA மகளிருக்கான கால்பந்தாட்ட போட்டியில் ஸ்பெயின் அணியை 4-0 என்ற கோஅல் கணக்கில் வீழ்த்தி ஜப்பான் அணி வெற்றிபெற்றுள்ளது.
FIFA மகளிருக்கான கால்பந்தாட்ட போட்டியில் Group C பிரிவில் ஜப்பான் மற்றும் ஸ்பெயின் அணிக்கு இடையிலான போட்டி இன்றையதினம் நடைபெற்றது.
குறித்த போட்டியின் முதல் பாதியின் 12வது நிமிடத்தில் ஜப்பான் அணி வீராங்கனை ஹினாடா மியாசாவா முதலாவது கோலை பதிவு செய்தார்.
இதன் மூலம் ஜப்பான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் போட்டியில் முன்னிலை வகித்தது.
அதனை தொடர்ந்து போட்டியின் முதலாவது பாதியின் 29வது நிமிடத்தில் ஜப்பான் அணி வீராங்கனை ரிக்கோ யுகி இரண்டாவது கோலை பதிவு செய்தார்.
அதற்கமைய ஜப்பான் அணியானது போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
தொடர்ந்து போட்டியின் முதலாவது பாதியின் 40வது நிமிடத்தில் ஜப்பான் அணி வீராங்கனை ஹினாடா மியாசாவா அணிக்கான தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார்.
முதலாவது பாதியின் முடிவில் ஜப்பான் அணி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
மேலும், முதலாவது பாதியில் ஸ்பெயின் அணி வீராங்கனைகள் ஜப்பான் அணி வீராங்கனைகளை எதிர்த்து ஒரு கோலை கூட பதிவுசெய்ய முடியாமல் போனது.
அதனை தொடர்ந்து ஆரம்பமாகிய இரண்டாவது பாதி ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் ஜப்பான் அணி வீராங்கனை மினா தனகா அணிக்கான நான்காவது கோலை பதிவு செய்தார்
இந்த கோல் ஜப்பான் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது.
இதன் மூலம் மூலம் ஜப்பான் அணியானது 4-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது
இரண்டாவது பாதியின் முடிவிலும் ஸ்பெயின் அணி வீராங்கனைகள் கோல் எதுவும் பதிவு செய்ய தவறிவிட்டனர்.
அதற்கமைய ஜப்பான் மகளிர் அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.