Breaking News
செங்கோட்டையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இந்திய கொடியை ஏற்றினார்
மேஜர்கள் நிகிதா நாயர் மற்றும் ஜாஸ்மின் கவுர் ஆகிய இரண்டு பெண் ராணுவ அதிகாரிகள், பிரதமருக்கு தேசியக் கொடியை ஏற்றிவைக்க உதவினர். இந்த ஆண்டு சுதந்திர தின நிகழ்வில் சுமார் 25,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

77-வது சுதந்திர தின உரையை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்கிழமை புது தில்லி செங்கோட்டையில் இந்தியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக, ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
மேஜர்கள் நிகிதா நாயர் மற்றும் ஜாஸ்மின் கவுர் ஆகிய இரண்டு பெண் ராணுவ அதிகாரிகள், பிரதமருக்கு தேசியக் கொடியை ஏற்றிவைக்க உதவினர். இந்த ஆண்டு சுதந்திர தின நிகழ்வில் சுமார் 25,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி தேசியக் கொடியை ஏற்றியதும், இந்திய விமானப்படையின் 2 உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட துருவ் அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் மார்க்-III மலர்களைப் பொழிந்தன. விங் கமாண்டர் அம்பர் அகர்வால் மற்றும் ஸ்க்வாட்ரான் லீடர் ஹிமான்ஷு ஷர்மா ஆகியோர் தலைமை தாங்கினர்.