பிரித்தானிய இளவரசி அன்னே சிறிலங்கா வரவுள்ளார்
கொழும்பில் இருக்கும் இளவரசி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.
இங்கிலாந்து இளவரசி இளவரசி அன்னே இன்று (ஜன.10) சிறிலங்கா வர உள்ளார்.
ஜனவரி 13 ஆம் தேதி வரை அவர் இங்கு தங்கியிருக்கும் போது, அவரது கணவர் துணைக் கப்பற்படைத் தளபதி (அட்மிரல்) சர் திமோதி லாரன்ஸ் உடன் இருப்பார்.
“இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 வருடங்களைக் குறிக்கும் வகையில் இந்த விஜயம் அமைந்துள்ளது. ஐக்கிய இராச்சியமும் இலங்கையும் பல வலுவான தனிப்பட்ட உறவுகளையும் பொதுவான நலன்களையும் பகிர்ந்துகொள்கின்றன, இரு நாடுகளையும் பொதுநலவாய அமைப்பு (காமன்வெல்த்) மூலம் இயற்கையான பங்காளிகளாக மாற்றுகின்றன,” என்று கொழும்பில் உள்ள இங்கிலாந்து தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இருக்கும் இளவரசி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.
மேலும், அவர் வணிகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சந்திப்பதற்கும், சேவ் தி சில்ட்ரன் ஸ்ரீலங்கா திட்டத்தைப் பார்வையிடுவதற்கும், காமன்வெல்த் போர் கல்லறைகளின் தலைவராக தனது புதிய பாத்திரத்தின் கீழ் பொதுநலவாய அமைப்புப் போர்க் கல்லறையைப் பார்வையிடுவதற்கும் திட்டமிட்டுள்ளார்.
இளவரசி கண்டி மற்றும் கொழும்பில் உள்ள மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் பயணம் மேற்கொள்வார். மேலும் யாழ்ப்பாணத்தில் இருக்கும் போது உள்ளூர்ச் சமூகங்கள் மற்றும் பொதுமக்கள் சமூகப் பிரதிநிதிகளை அவர் சந்திப்பார்.