Breaking News
வங்கதேச நடிகை மெஹர் அஃப்ரோஸ் ஷாவோன் தேசத்துரோக வழக்கில் கைது
" வியாழக்கிழமை இரவு, மெஹர் அஃப்ரோஸ் ஷாவோன் தன்மொண்டியில் கைது செய்யப்பட்டார்" என்று டாக்கா ட்ரிப்யூனிடம் துப்பறியும் பிரிவின் கூடுதல் காவல்துறை ஆணையர் ரெசாவுல் கரீம் மாலிக் உறுதிப்படுத்தினார்.

நடிகை மெஹர் அஃப்ரோஸ் ஷாவோன் டாக்காவில் அரசுக்கு எதிராக சதி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டன.
" வியாழக்கிழமை இரவு, மெஹர் அஃப்ரோஸ் ஷாவோன் தன்மொண்டியில் கைது செய்யப்பட்டார்" என்று டாக்கா ட்ரிப்யூனிடம் துப்பறியும் பிரிவின் கூடுதல் காவல்துறை ஆணையர் ரெசாவுல் கரீம் மாலிக் உறுதிப்படுத்தினார்.
மெஹர் அஃப்ரோஸ் ஷாவோன் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்தனர். முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசாங்கத்தை அவர் வெளிப்படையாக விமர்சித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.