ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்திற்கு முன்னேற்றம்
அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் பிஷன் சிங் பேடி ஆகியோருடன் பந்துவீச்சுத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நான்காவது இந்திய வீரர் பும்ரா ஆவார்.

இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பரபரப்பான செயல்திறனின் பின்னணியில் ஜஸ்பிரித் பும்ரா முதல் முறையாகப் பன்னாட்டுக் கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றார்.
அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் பிஷன் சிங் பேடி ஆகியோருடன் பந்துவீச்சுத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நான்காவது இந்திய வீரர் பும்ரா ஆவார். 30 வயதான இவர், இதற்கு முன் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பு நான்காவது இடத்தில் இருந்த பும்ரா மூன்று இடங்கள் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் முதல் நம்பர் 1 இடத்தில் இருக்கும் அஸ்வின், டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட தரவரிசையில் இரண்டு இடங்கள் சரிந்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார், நியூசிலாந்தில் தென்னாப்பிரிக்காவின் டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறிய போதிலும் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.