Breaking News
நிதிச் செயலாளராக மஹிந்த சிறிவர்தன மீண்டும் பொறுப்பேற்பு
திறைசேரியின் பிரதிச் செயலாளர்கள், நிதியமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை உருவாக்கம், திட்டமிடல் மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள கே.எம்.எம். சிறிவர்தன, புதன்கிழமை (25) தனது கடமைகளை மீண்டும் ஆரம்பித்தார்.
திறைசேரியின் பிரதிச் செயலாளர்கள், நிதியமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அவர் மத்திய வங்கியில் 30 வருடங்களுக்கும் மேலாகச் சேவையாற்றியவர் ஆவார். அவர் பிரதி ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநர் மற்றும் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகிய முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.