அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் 2 நிமிட காணொலி அழைப்பின் மூலம் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது
டெக்கிரஞ்ச் (TechCrunch) அறிக்கையின்படி, பிரண்ட்டெஸ்க் (Frontdesk), சமீபத்தில் முழுநேர, பகுதிநேர தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உட்பட அதன் கணிசமான எண்ணிக்கையிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
பெட்டர். காமுக்குப் (better.com) பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு நிறுவனம் காணொலி அழைப்பின் மூலம் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. சொத்துத் தொழில்நுட்ப (ப்ராப் டெக்) நிறுவனமான ஃபிரண்ட்டெஸ்க், இரண்டு நிமிட கூகுள் மீட் அழைப்பின் மூலம் நிறுவனத்தின் மொத்த பணியாளர்களான சுமார் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
டெக்கிரஞ்ச் (TechCrunch) அறிக்கையின்படி, பிரண்ட்டெஸ்க் (Frontdesk), சமீபத்தில் முழுநேர, பகுதிநேர தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உட்பட அதன் கணிசமான எண்ணிக்கையிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. ஒரு சுருக்கமான கூகுள் மீட் அழைப்பின் போது இந்த நடவடிக்கை நிகழ்ந்தது. இதனால் பலருக்கு அதிர்ச்சியும், நிறுவனத்தில் அவர்களின் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற நிலையும் ஏற்பட்டது.
தலைமை நிர்வாக அதிகாரி, ஜெஸ்ஸி டெபிண்டோ, அழைப்பின் போது செய்தியை வெளியிட்டார். திவால்நிலைக்கு மாற்றான அரசு சொத்துப் பெறுதல்நிலைக்குத் (ரிசீவர்ஷிப்) தாக்கல் செய்யும் பிரண்ட்டெஸ்க் நிறுவனத்தின் திட்டங்களைக் குறிப்பிட்டார். கருத்துக்காக அணுகிய போதிலும், நிறுவனம் அமைதியாக உள்ளது. அதன் வலைத்தளம் வாடிக்கையாளர்களுக்கு மாற்று தங்குமிடங்களைக் கண்டறிய அறிவுறுத்துகிறது. இரண்டு வாரங்களுக்குள் மேலும் தொடர்பை வலைத்தளம் எதிர்பார்க்கிறது.