Breaking News
பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளி சரணடைந்த சில நாட்களில் சிறை விடுப்பில் வெளியே வந்தார்
குஜராத் உயர் நீதிமன்றம் வழங்கிய 5 நாள் சிறை விடுப்பில் பிரதீப் ரமன்லால் மோதியா சிறையில் இருந்து வெளியே வந்தார். பின்னர் அவர் தனது கிராமத்தை அடைந்தார்.

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேர் குஜராத்தின் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் உள்ள கோத்ரா கிளை சிறையில் சரணடைந்த பதினைந்து நாட்களுக்குப் பிறகு, குற்றவாளிகளில் ஒருவர் வெள்ளிக்கிழமை சிறை விடுப்பில் (பரோலில்) வெளியே வந்தார்.
குஜராத் உயர் நீதிமன்றம் வழங்கிய 5 நாள் சிறை விடுப்பில் பிரதீப் ரமன்லால் மோதியா சிறையில் இருந்து வெளியே வந்தார். பின்னர் அவர் தனது கிராமத்தை அடைந்தார்.
பிப்ரவரி 7 ஆம் தேதி தனது மாமனார் இறந்ததைத் தொடர்ந்து மோதியா நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.
முன்னதாக, சிறை அதிகாரிகள் முன்பு சரணடைய கால அவகாசம் கோரிய குற்றவாளிகளின் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.