நவம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 74,664 சுற்றுலாப் பயணிகள் சிறிலங்காவுக்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை எதிர்வரும் நவம்பர் மாதம் 204,114 சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என கணித்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அண்மைய புள்ளிவிபரங்களின்படி, நவம்பர் மாதத்தின் முதல் 15 நாட்களில் மொத்தமாக 74,664 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிறிலங்காவுக்கு வருகை தந்துள்ளனர்.
இது 2023 ஆம் ஆண்டின் எந்தவொரு மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையாகும். இதற்கு முன்பு முதல் 15 நாட்களில் அதிகபட்சமாக 2023 மார்ச் மாதத்தில் 60,882 பன்னாட்டு பார்வையாளர்கள் வந்திருந்தனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை எதிர்வரும் நவம்பர் மாதம் 204,114 சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என கணித்துள்ளது.
ஜனவரி 1 முதல் நவம்பர் 15 வரை மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,200,119 ஆகும், இதன் மூலம் 1.59 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ தரவு காட்டுகிறது.
சிறிலங்காவின் சுற்றுலாத் துறை 2023 ஆம் ஆண்டில் 2 மில்லியன் பார்வையாளர்களை ஈர்ப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.