சமுத்திர பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்க தூதுவர் முக்கிய தகவல்
சமுத்திர பாரம்பரியம் என்பது இணைப்பை அடிப்படையாகக்கொண்ட கதையாக இருப்பதாகவும், அந்தப் பாரம்பரியத்தின் அடிப்படையில் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காண்மை இப்போது தொடர்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சமுத்திர பாரம்பரியம் என்பது இணைப்பை அடிப்படையாகக்கொண்ட கதையாக இருப்பதாகவும், அந்த பாரம்பரியத்தின் அடிப்படையில் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காண்மை இப்போது தொடர்வதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் சுட்டிக்காட்டியுள்ளார்.
கலாசார பேணுகைக்கான தூதுவர்கள் நிதியத்தின் ஊடாக நிறுவப்பட்ட கொடவாய கப்பல் சிதைவு தொடர்பான கண்காட்சி மற்றும் கருத்தரங்கு 03-09-2025 அன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் மற்றும் கலாசார விவகார அமைச்சர் சுனில் செனெவிரத்ன ஆகியோரால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
அங்கு உரையாற்றிய தூதுவர் ஜுலி சங், பல்லாண்டு காலமாக கடலின் அடியில் மூழ்கியிருந்த கொடவாய கப்பல் சிதைவு, தற்போது இருநாடுகளுக்கு இடையில் பகிரப்பட்ட நிபுணத்துவம் மற்றும் ஒத்துழைப்பு என்பவற்றின் ஊடாக மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அத்தோடு சமுத்திர பாரம்பரியம் என்பது இணைப்பை அடிப்படையாகக்கொண்ட கதையாக இருப்பதாகவும், அந்தப் பாரம்பரியத்தின் அடிப்படையில் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காண்மை இப்போது தொடர்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
'கொடவாய கப்பல் சிதைவு 2008 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்துக்கு அண்மையில் கண்டறியப்பட்டது. இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் கண்டறியப்பட்ட மிகப்பழமைவாய்ந்த கப்பல் சிதைவாக இது கருதப்படுகிறது. இக்கப்பல் சிதைவு குறித்து ஆவணப்படுத்துவதற்கும், அக்கதையை உலகுக்குச் சொல்வதற்கும் துறைசார் ஆய்வாளர்கள் விசேட திறன்கள் மற்றும் புத்தாக்கத்தைப் பிரயோகித்துள்ளனர்' என்றும் ஜுலி சங் தெரிவித்தார்.





