Breaking News
கன்னட நடிகை ஸ்ருதியை தாக்குதல் நடத்திய கணவர் கைது
நடிகையும், தனியார் சேனல் தொகுப்பாளருமான ஸ்ருதி என்று அழைக்கப்படும் மஞ்சுளாவை அவரது கணவர் அம்பரீஷ் தாக்கியதாக கூறப்படுகிறது.

பெங்களூருவில் கன்னட சின்னத்திரை நடிகை ஸ்ருதி குடும்ப மற்றும் நிதி தகராறில் கணவரால் தாக்கப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் ஸ்ருதி மீது மிளகுத் தெளிப்பானைத் (பெப்பர் ஸ்பிரே) தெளித்து, அவரது விலா எலும்புகள், தொடை மற்றும் கழுத்தில் குத்தினார். அவரது தலையை சுவரில் மோதியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் ஜூலை 4 ஆம் தேதி நடந்தது. நடிகையும், தனியார் சேனல் தொகுப்பாளருமான ஸ்ருதி என்று அழைக்கப்படும் மஞ்சுளாவை அவரது கணவர் அம்பரீஷ் தாக்கியதாக கூறப்படுகிறது.
பெங்களூரு மேற்கு துணை காவல்துறை ஆணையர் கிரிஷ் இந்த வழக்கை உறுதிப்படுத்தியதோடு, தம்பதியினரிடையே தகராறு சம்பந்தப்பட்ட இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.