Breaking News
கேரம் போர்டு வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க கொழும்பு உயர்நீதிமன்றம் குற்றப்புலனாய்வு பணிப்பாளருக்கு உத்தரவு
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் லங்கா சதொச ஊடாக 14,000 கேரம் போர்டுகள் மற்றும் 11,000 செக்கர்ஸ் போர்டுகளை இறக்குமதி செய்து அரசாங்கத்திற்கு கணிசமான இழப்பை ஏற்படுத்தியதாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் லங்கா சதொச ஊடாக 14,000 கேரம் போர்டுகள் மற்றும் 11,000 செக்கர்ஸ் போர்டுகளை இறக்குமதி செய்து அரசாங்கத்திற்கு கணிசமான இழப்பை ஏற்படுத்தியதாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோரும், விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி ஆகியோரும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.