Breaking News
ஷேக் ஹசீனாவுடன் ஹிண்டன் விமான தளத்தில் அஜித் தோவல் சந்திப்பு
ஷேக் ஹசீனா தனது சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியான செய்திகளுக்கு மத்தியில் அவர் பதவி விலகல் செய்ததை வங்கதேச இராணுவத் தலைவர் உறுதிப்படுத்தினார்.
வங்கதேசத்தில் திங்களன்று அரசியல் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டது. அரசாங்க வேலை ஒதுக்கீட்டுத் திட்டத்திற்கு எதிரான வன்முறை மாணவர் போராட்டங்களை அடுத்து, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகினார்.
ஷேக் ஹசீனா தனது சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியான செய்திகளுக்கு மத்தியில் அவர் பதவி விலகல் செய்ததை வங்கதேச இராணுவத் தலைவர் உறுதிப்படுத்தினார். வங்கதேசத்தை ஆள இடைக்கால அரசாங்கத்தை அமைக்க இராணுவம் உதவும் என்று இராணுவத் தலைவர் கூறினார்.
தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை டாக்காவில் இருந்து வந்திறங்கிய காஜியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான தளத்தில் சந்தித்தார்.





