அதிகார பகிர்வின் அடிப்படையில் இனத்துவ சுயாட்சி அலகுகள் உருவாக்கப்பட வேண்டும்: குமார் குணரட்னம்
நாட்டில் காணப்படும் இன முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் பொருட்டு அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் தமிழ், முஸ்லிம், சிங்கள மற்றும் மலையக மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சுயாட்சி அலகுகளை உருவாக்குவது அவசியமாகும் என்று முன்னிலை சோசலிச கட்சியின் பொதுச்செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்தார். அத்துடன் அரசியல் தீர்வாக இருமன்ற ஆட்சி முறையை அமைய வேண்டும். இதன்படி, தற்போதுள்ள பாராளுமன்றத்திற்கு மேலதிகமாக, இன ரீதியான சமத்துவப் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட இரண்டாவது மன்றம் உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் மொழி, மதம் மற்றும் கலாசாரம் சார்ந்த சட்டங்களை இயற்றும்போது சிறுபான்மை இனங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார். முன்னிலை சோசலிசக் கட்சியின் நான்காவது தேசிய மாநாடு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பான தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு 21-02-2026 அன்றுயாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார ஆதிக்கம் சரிவடைந்து வரும் நிலையில், அதனைத் தக்கவைக்க உக்ரைன் மற்றும் பாலஸ்தீனத்தில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமானமற்ற போர்களை கண்டிக்கதக்கது. சர்வதேச சட்டங்களையும் ஐக்கிய நாடுகள் சபையையும் மதிக்காது வல்லரசு நாடுகள் செயற்படும் சூழலில், இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களும் அதே ஏகாதிபத்திய மற்றும் இந்திய மேலாதிக்கக் கொள்கைகளுக்கு அடிபணிந்து நடக்கின்றனர். கடந்த 76 ஆண்டுகால சாபத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பழைய ஆட்சியாளர்களின் பொருளாதார மற்றும் அரசியல் பாதையையே பின்பற்றுகின்றனர். பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் இன்று அதே போன்றதொரு அடக்குமுறைச் சட்டத்தைப் புதிய வடிவில் கொண்டுவர முயற்சிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. கல்வித்துறையில் கொண்டுவரப்படும் சீர்திருத்தங்கள் உலக வங்கியின் ஆலோசனையின் பேரில் செல்வந்தர்களுக்கான ஊழியர்களை உருவாக்கும் நோக்கம் கொண்டதே தவிர, சாதாரண மக்களின் பிள்ளைகளுக்கானது அல்ல. தேசிய இனப்பிரச்சினை தீராத வடுவாக இருந்து வருகின்றது. குறிப்பாக மலையகத் தமிழ் மக்களைத் தனித்துவமான ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும். அரசியல் தீர்வாக இருமன்ற ஆட்சி முறையை அமைய வேண்டும். இதன்படி, தற்போதுள்ள பாராளுமன்றத்திற்கு மேலதிகமாக, இன ரீதியான சமத்துவப் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட இரண்டாவது மன்றம் உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் மொழி, மதம் மற்றும் கலாசாரம் சார்ந்த சட்டங்களை இயற்றும்போது சிறுபான்மை இனங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். அத்துடன் அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் தமிழ், முஸ்லிம், சிங்கள மற்றும் மலையக மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சுயாட்சி அலகுகளை உருவாக்குவது அவசியமாகும். வாக்களிப்பதோடு மக்களின் கடமை முடிந்துவிடுவதில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசியல் கட்சிகளிடம் அதிகாரத்தைக் கையளித்துவிட்டு காத்திருக்கும் முறையை மாற்ற வேண்டும். அதற்குப் பதிலாக கிராமங்கள், நகரங்கள் மற்றும் தொழிற்சங்க ரீதியாக மக்கள் சபைகளை உருவாக்கி, அதன் மூலம் மக்கள் அன்றாடம் ஆட்சியில் பங்கெடுக்கும் வேலைத்திட்டத்தை மார்ச் முதலாம் திகதி நடைபெறவுள்ள மாநாட்டில் சமர்ப்பிக்கவுள்ளோம். இடதுசாரித்துவம் என்பது தோல்வியடைந்த ஒன்றல்ல என்பதை நிரூபிக்கவும், உண்மையான முறையியல் மாற்றத்தை ஏற்படுத்தவும் இம்முறை சர்வதேச இடதுசாரிப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் தேசிய மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறும் என்றார்.
நாட்டில் காணப்படும் இன முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் பொருட்டு அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் தமிழ், முஸ்லிம், சிங்கள மற்றும் மலையக மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சுயாட்சி அலகுகளை உருவாக்குவது அவசியமாகும் என்று முன்னிலை சோசலிச கட்சியின் பொதுச்செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்தார்.
அத்துடன் அரசியல் தீர்வாக இருமன்ற ஆட்சி முறையை அமைய வேண்டும். இதன்படி, தற்போதுள்ள பாராளுமன்றத்திற்கு மேலதிகமாக, இன ரீதியான சமத்துவப் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட இரண்டாவது மன்றம் உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் மொழி, மதம் மற்றும் கலாசாரம் சார்ந்த சட்டங்களை இயற்றும்போது சிறுபான்மை இனங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முன்னிலை சோசலிசக் கட்சியின் நான்காவது தேசிய மாநாடு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பான தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு 21-02-2026 அன்றுயாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார ஆதிக்கம் சரிவடைந்து வரும் நிலையில், அதனைத் தக்கவைக்க உக்ரைன் மற்றும் பாலஸ்தீனத்தில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமானமற்ற போர்களை கண்டிக்கதக்கது. சர்வதேச சட்டங்களையும் ஐக்கிய நாடுகள் சபையையும் மதிக்காது வல்லரசு நாடுகள் செயற்படும் சூழலில், இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களும் அதே ஏகாதிபத்திய மற்றும் இந்திய மேலாதிக்கக் கொள்கைகளுக்கு அடிபணிந்து நடக்கின்றனர்.
கடந்த 76 ஆண்டுகால சாபத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பழைய ஆட்சியாளர்களின் பொருளாதார மற்றும் அரசியல் பாதையையே பின்பற்றுகின்றனர். பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் இன்று அதே போன்றதொரு அடக்குமுறைச் சட்டத்தை புதிய வடிவில் கொண்டுவர முயற்சிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது.
கல்வித்துறையில் கொண்டுவரப்படும் சீர்திருத்தங்கள் உலக வங்கியின் ஆலோசனையின் பேரில் செல்வந்தர்களுக்கான ஊழியர்களை உருவாக்கும் நோக்கம் கொண்டதே தவிர, சாதாரண மக்களின் பிள்ளைகளுக்கானது அல்ல.
தேசிய இனப்பிரச்சினை தீராத வடுவாக இருந்து வருகின்றது. குறிப்பாக மலையகத் தமிழ் மக்களைத் தனித்துவமான ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும். அரசியல் தீர்வாக இருமன்ற ஆட்சி முறையை அமைய வேண்டும். இதன்படி, தற்போதுள்ள பாராளுமன்றத்திற்கு மேலதிகமாக, இன ரீதியான சமத்துவப் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட இரண்டாவது மன்றம் உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் மொழி, மதம் மற்றும் கலாசாரம் சார்ந்த சட்டங்களை இயற்றும்போது சிறுபான்மை இனங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.
அத்துடன் அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் தமிழ், முஸ்லிம், சிங்கள மற்றும் மலையக மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சுயாட்சி அலகுகளை உருவாக்குவது அவசியமாகும். வாக்களிப்பதோடு மக்களின் கடமை முடிந்துவிடுவதில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசியல் கட்சிகளிடம் அதிகாரத்தைக் கையளித்துவிட்டு காத்திருக்கும் முறையை மாற்ற வேண்டும். அதற்குப் பதிலாக கிராமங்கள், நகரங்கள் மற்றும் தொழிற்சங்க ரீதியாக மக்கள் சபைகளை உருவாக்கி, அதன் மூலம் மக்கள் அன்றாடம் ஆட்சியில் பங்கெடுக்கும் வேலைத்திட்டத்தை மார்ச் முதலாம் திகதி நடைபெறவுள்ள மாநாட்டில் சமர்ப்பிக்கவுள்ளோம்.
இடதுசாரித்துவம் என்பது தோல்வியடைந்த ஒன்றல்ல என்பதை நிரூபிக்கவும், உண்மையான முறையியல் மாற்றத்தை ஏற்படுத்தவும் இம்முறை சர்வதேச இடதுசாரிப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் தேசிய மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறும் என்றார்.





