Breaking News
'பிரஜா சக்தி' தேசிய நிகழ்ச்சி திட்டம் ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பண நிகழ்வு
பிரதேச சக்தி தேசிய செயற்குழுவின் ஆரம்ப கலந்துரையாடல் செவ்வாய்ப் (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சமூகங்களை வலுவூட்டல் மற்றும் பொருளாதார நன்மைகளை சமமாக பகிர்ந்தளிப்பதை நோக்கமாகக் கொண்டு தற்போதைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள 'பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டம்' ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜூலை 4 ஆம் திகதி அலரி மாளிகையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
பிரதேச சக்தி தேசிய செயற்குழுவின் ஆரம்ப கலந்துரையாடல் செவ்வாய்ப் (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திகா சனத் குமாரநாயக்க ஆகியோர் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியிருந்தனர்.