முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்தும் கனடா அரசாங்கம் விசேட கவனம்
இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் இலங்கைக்கான கனடா தூதுவர் எரிக் வோல்ஸ் மற்றும் பொதுப்போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோருக்கிடையிலான முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.

ஊழலற்ற நிர்வாகத்துடன் மக்களிடம் நம்பிக்கையை வென்றுள்ள புதிய அரசாங்கத்துடன் வணிக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்தும் கனடா அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கைக்கான கனடிய உயஸ்தானிகர் எரிக் வோல்ஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் இலங்கைக்கான கனடா தூதுவர் எரிக் வோல்ஸ் மற்றும் பொதுப்போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோருக்கிடையிலான முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது, ஊழலற்ற நிர்வாகத்துடன் மக்களிடம் நம்பிக்கையை வென்றுள்ள புதிய அரசாங்கத்துடன் வணிக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்த கனடா அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதுடன், விரைவில் இந்த நடவடிக்கைகளில் கனடா வணிக சமூகத்தையும் வர்த்தக பிரதிநிதிகளையும் ஈடுபடுத்தவுள்ளதாக கனடா தூதுவர் தெரிவித்தார்.
மேலும், இலங்கையின் விமான சேவையின் அபிவிருத்தி, சுற்றுலாக் கைத்தொழில் ஊக்குவிப்பு, வர்த்தக கூட்டுறவுகள் மற்றும் இரு நாடுகளின் பாராளுமன்ற ஒத்துழைப்பு ஆகிய பல துறைகளைப் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி பாதைக்கு மேலும் ஆதரவு வழங்க கனடா அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் இலங்கைக்கான கனடா தூதுவர் எரிக் ல்ஸ் வலியுறுத்தினார். இச்சந்திப்பின்போது கனடா அரசின் வர்த்தக மற்றும் அரசியல் ஆலோசகராக உள்ள குவென் தெமலும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.