தபால் திணைக்களத்திடம் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் வாக்குகள் ஒப்படைப்பு
நாடளாவிய ரீதியில் 25 நிலையங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் மொத்தம் 712,319 பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்குகள் தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர்களுக்கு விநியோகிக்க பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்குச் சீட்டுகள் அடங்கிய முன்பதிவு செய்யப்பட்ட பொதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு திங்கட்கிழமை (26) தபால் திணைக்களத்திடம் கையளித்துள்ளது.
அதன்படி, நாடளாவிய ரீதியில் 25 நிலையங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் மொத்தம் 712,319 பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்குகள் தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.
செப்டெம்பர் 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள தபால் மூல வாக்களிப்புக்கு முன்னதாக தபால் மூல வாக்குகள் 27 ஆம் திகதி செவ்வாய்கிழமை (27) சான்றளிக்கும் உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்படவுள்ளன. அதேவேளை, செப்டெம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகள் தபால் மூலத்திற்கான மேலதிக தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன. ஆரம்ப தேதிகளில் வாக்களிக்க முடியாத வாக்காளர்கள்.