சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த கடும் பிரயத்தனம்: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு
பிரதி பொலிஸ் மா அதிபர் நிஷாந்த டி சொய்சா தெரிவிக்கையில், நாட்டில் கடந்த சில நாட்களாக துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. எனினும் நாம் முறையாக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம்.
நாட்டில் இடம்பெற்று வரும் சமூகவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸார் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கமைய எம்மால் திட்டமிட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியும். அதற்காக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுமெனன பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உதயகுமார வுட்லர் தெரிவித்தார்.
கொழும்பில் 07-09-2025 அன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
அண்மைய நாட்களாக பொதுமக்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு அமையவே பொலிஸாரினால் வெற்றிகரமான முறையில் பல சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தது.
எனவே நாம் பொதுமக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். எதிர்காலத்திலும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு உதவுமாறு கோரிக்கை விடுக்கிறோம்.
அதேபோன்று இந்த நாட்களில் நாட்டில் இடம்பெறும் சமூகவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸார் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.எம்மால் திட்டமிட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறோம். அதற்காக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.
இதன்போது கொழும்பு மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நிஷாந்த டி சொய்சா தெரிவிக்கையில், நாட்டில் கடந்த சில நாட்களாக துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. எனினும் நாம் முறையாக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம்.
அதேபோன்று நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மருதானை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளை பின்தொடர்ந்து சென்று அவர்களில் ஒருவரை கைது செய்திருந்தோம் எதிர்காலத்திலும் நாம் முறையான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளோம். அத்துடன் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த திட்டங்களை வகுத்துள்ளோம். எனவே எம்மால் திட்டமிட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறோம் என்றார்.





