இந்திய-இலங்கை உறவு விசேடமானது: உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா
இந்தியாவிற்கு வெளியே வழங்கப்படும் முதலாவது சர்வதேச பட்டப்படிப்பை இலங்கையில் அறிமுகப்படுத்தியதன் மூலம் கல்வித்துறையில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய, இலங்கை இடையிலான உறவானது இராஜதந்திர உறவுகளுக்கும் அப்பாலான விசேடமானதாகும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம் மற்றும் இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் ஆகியவற்றை முன்னிட்டு, 'இலங்கை - இந்தியச் சங்கம்' ஏற்பாடு செய்திருந்த விசேட கொண்டாட்டத்துடன் கூடிய இராப்போசன விருந்து, 26-02-2026அன்று கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இந்திய உயர்ஸ்தானிகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், இந்த நிகழ்வில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவானது வெறும் இராஜதந்திர மட்டத்துடன் மட்டுப்படுத்தப்படாது, அதற்கு அப்பால் சென்ற ஒரு பலமான, அதேவேளை விசேடமான உறவாகும்.
இந்தியாவிற்கு வெளியே வழங்கப்படும் முதலாவது சர்வதேச பட்டப்படிப்பை இலங்கையில் அறிமுகப்படுத்தியதன் மூலம் கல்வித்துறையில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தகவல் தொடர்பாடல் மற்றும் மக்களிடையிலான உறவுகள் போன்ற பல துறைகளில் ஒத்துழைப்பு மேலும் வளர்ச்சியடைந்துள்ளது. இந்திய - இலங்கை உறவுகளில் இன்றைய காலகட்டத்தில் ஒரு பாரிய முன்னேற்றம் காணப்படுகின்றது என்றார்.





