மழையுடனான காலநிலை தொடரும்: ஒருவர் உயிரிழப்பு, 509 பேர் பாதிப்பு
மழையுடனான காலநிலை தொடர்கின்ற நிலையில் ராஜாங்கணை நீர்த்தேக்கத்தின் 06 வான்கதவுகளும் அம்பகமுவ நீர்த்தேக்கத்தின் 02 வான்கதவுகளும், கலா ஓயா நீர்த்தேக்கத்தின் 02 வான்கதவுகளும், தெதறு ஓயா நீர்த்தேக்கத்தின் 02 வான்கதவுகளும், இப்பன்கடுவ நீர்த்தேக்கத்தின் 04 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
மேல், சப்ரகமுவ,மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் இன்றைய தினமும் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் நிலவும் மழையுடயான காலநிலையால் அனுராதபுரம்,புத்தளம் ஆகிய இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 509 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனுதாரபுரம் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.மழையுடனான காலநிலை மற்றும் மண்சரிவு அபாயம் குறித்து வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மழையுடனான காலநிலை தொடர்கின்ற நிலையில் ராஜாங்கணை நீர்த்தேக்கத்தின் 06 வான்கதவுகளும் அம்பகமுவ நீர்த்தேக்கத்தின் 02 வான்கதவுகளும், கலா ஓயா நீர்த்தேக்கத்தின் 02 வான்கதவுகளும், தெதறு ஓயா நீர்த்தேக்கத்தின் 02 வான்கதவுகளும், இப்பன்கடுவ நீர்த்தேக்கத்தின் 04 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
மழையுடனான காலநிலை நாளையுடன் சற்று குறைவடையும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் குறிப்பிட்டுள்ளது.ஆகவே பாதுகாப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.