இலங்கைக்கான உதவிகள் ஒரு குடும்ப உறுப்பினருக்குச் செய்யும் கடமை உணர்வு - இந்திய உயர்ஸ்தானிகர்
இலங்கைக்கு இந்தியா வழங்கும் அபிவிருத்தி உதவிகள், ஒரு குடும்ப உறுப்பினருக்குச் செய்யும் கடமை உணர்வுடனும் பொறுப்புடனும் வழங்கப்படும் ஒன்றென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு இந்தியா வழங்கும் அபிவிருத்தி உதவிகள், ஒரு குடும்ப உறுப்பினருக்குச் செய்யும் கடமை உணர்வுடனும் பொறுப்புடனும் வழங்கப்படும் ஒன்று என்பது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாடாகும்.அண்டை நாடுகளாகவும் நெருங்கிய பங்காளிகளாகவும், எமது மக்களின் நிலையான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை நோக்கிய இந்தப் பகிர்ந்த பாதையில் நாங்கள் தொடர்ந்து இணைந்து பயணிப்போம் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் கட்டுமானப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் 16-09-2026அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் உயர்ஸ்தானிகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் முல்லைத்தீவு மருத்துவ அறை தொகுதி ஆகியவற்றுக்கான ஒப்பந்தங்கள் ஜனாதிபதி தலைமையில் கையெழுத்தாகின. அந்த வாக்குறுதிகள் விரைவாகச் செயல்படுத்தப்படுவதைக் காண்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இலங்கைக்கு இந்தியா வழங்கும் அபிவிருத்தி உதவிகள், ஒரு குடும்ப உறுப்பினருக்குச் செய்யும் கடமை உணர்வுடனும் பொறுப்புடனும் வழங்கப்படும் ஒன்றென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்துடனும் இலங்கை மக்களுடனும் இணைந்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களின் நலனுக்காகவும் வளத்திற்காகவும் நெருக்கமாகச் செயற்பட நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். அண்டை நாடுகளாகவும் நெருங்கிய பங்காளிகளாகவும், எமது மக்களின் நிலையான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை நோக்கிய இந்தப் பகிர்ந்த பாதையில் நாங்கள் தொடர்ந்து இணைந்து பயணிப்போம் என்றார்.





