கஞ்சிபானை இம்ரானை மலேசியாவில் தேடிய நடவடிக்கை ஒரு வெற்றி:உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான்
இந்த அனைத்துக் குழுக்களையும் கட்டுப்படுத்துவதற்கும், குற்றப் பின்னணிகளை கண்டறிவதற்கும் பொலிஸார் விரிவான திட்டங்களை வகுத்துச் செயற்பட்டு வருகின்றனர்.
மலேசியா போன்ற அடையாளம் தெரியாத, புதியதொரு நாட்டில் அந்நாட்டு பொலிஸார் மற்றும் ஏனைய பாதுகாப்புத் துறையினரின் உதவியைப் பெற்று, தலைமறைவாகியுள்ள கஞ்சிபானை இம்ரானை தேடும் நடவடிக்கையில் இறங்கிய முயற்சியை தாம் ஒரு வெற்றியாகவே கருதுவதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல தெரிவித்தார்.
'முழுநாடும் ஒன்றாக' தேசிய வேலைத்திட்டத்தின் அலுவலகத்தில் 13-08-2026 அன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகவியளாலர் ஒருவர் எழுத்பிய கேள்விக்கு அவர் பதில் அளிக்ககையில, பொதுவாக நமது நாட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குச் செல்லும் போது, அங்குள்ள சூழல் குறித்து முழுமையான புரிதல் இல்லாத நிலை காணப்படலாம். மலேசியா போன்ற அடையாளம் தெரியாத, புதியதொரு நாட்டில் அந்நாட்டு பொலிஸாரின் உதவியுடன் சந்தேகநபரை தேடி நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்தோம், அவ்வாறானதொரு நடவடிக்கையில் களமிறங்கியதை தோல்வி என நினைக்கக் கூடாது. மாறாக அதன் வெற்றியை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
"பாதாள உலகக் குழுவினர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் சமூகத்தில் தங்களது அதிகாரத்தையும் பலத்தையும் மீண்டும் நிலைநிறுத்திக் கொள்வதற்காகவே துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான குற்றச் செயல்கள் இடம்பெறுவதற்கான முக்கிய காரணம், குறித்த குழுக்கள் தங்களுக்கு இடையிலான அதிகாரத்தைப் தக்கவைத்துக்கொள்ள முயல்வதேயாகும்.
நாடு தழுவிய ரீதியில் பாதாள உலகக் குழுக்களின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களை இலக்கு வைத்து புலனாய்வு அதிகாரிகளும், குற்றப் புலனாய்வுத் பிரிவும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த சில மற்றும் சந்தேகநபர்களை பொலிஸார் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த காலங்களில் பல முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், மீண்டும் சில இடங்களில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மற்றும் கொலைகள் பதிவாகியுள்ளன. இந்த அனைத்துக் குழுக்களையும் கட்டுப்படுத்துவதற்கும், குற்றப் பின்னணிகளை கண்டறிவதற்கும் பொலிஸார் விரிவான திட்டங்களை வகுத்துச் செயற்பட்டு வருகின்றனர். நீண்டகாலமாக ஒழுங்கமைக்கப்பட்டுச் செயற்பட்டு வரும் இவ்வாறான பாதாள உலகக் குழுக்களை உடனடியாகக் ஒழிப்பது இலகுவான காரியமல்ல. இதற்குச் சிறிது காலம் தேவை.
எனினும், தற்போது பொலிஸாரும் ஏனைய பாதுகாப்புப் பிரிவினரும் இணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதனால், இந்நிலையைக் விரைவில் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். கடந்த இரண்டு மூன்று வருட காலப்பகுதியில் வரலாற்றில் இல்லாதவாறு அதிகளவிலான போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய அதிகளவிலான சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.





