இக்கடினமான வேளையில் தோளோடு தோள் நிற்போம்: சீனா
'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
துன்பத்தின்போது உடன் இருப்பவனே உண்மையான நண்பன்' எனும் வாசகத்துக்கு அமைய, இலங்கை மிகமோசமான நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் இலங்கையுடன் உடன்நிற்கவும், இதிலிருந்து மீள்வதற்கு அவசியமான உதவிகளை வழங்கவும் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கைக்கு சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச தரப்பினர் உதவிகளை வழங்கிவருகின்றனர்.
அந்தவகையில் இலங்கை மக்களுக்கான நிவாரண உதவி முயற்சிகளுக்குப் பங்களிப்புச் செய்யும் வகையில் சீன அரசாங்கத்தினால் ஒரு மில்லியன் டொலர் நிதியுதவியும், 10 மில்லியன் ஆர்.எம்.பி பெறுமதியான நிவாரணப்பொருட்களும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
அதேவேளை சீன செஞ்சிலுவை சங்கத்தினால் இலங்கை செஞ்சிலுவை சங்கத்துக்கு 100,000 டொலர் உடனடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு இலங்கையிலுள்ள வெளிநாட்டு சீன சங்கத்துடன் இணைந்து சீன வர்த்தக சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்ட நன்கொடை சேகரிப்பு முயற்சியின் ஊடாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவக்கூடியவகையில் 10 மில்லியன் ரூபா நிதி திரட்டப்பட்டுள்ளது.
இவ்வனைத்து உதவிகளும் இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங்கினால் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளனர்.
மேலும் 'துன்பத்தின்போது உடன் இருப்பவனே உண்மையான நண்பன்' எனும் வாசகத்துக்கு அமைய, இலங்கை மிகமோசமான நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் இலங்கையுடன் உடன்நிற்கவும், இதிலிருந்து மீள்வதற்கு அவசியமான உதவிகளை வழங்கவும் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.





