Breaking News
டி20 உலகக் கோப்பை புறக்கணிப்பு விவகாரம்: பாகிஸ்தானுக்கு கடும் நடவடிக்கை எடுக்கலாம் என ஐசிசி எச்சரிக்கை
இந்த முடிவு முன்னெடுக்கப்பட்டால், இதுவரை இல்லாத அளவிலான கடுமையான தண்டனைகள் விதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டி20 உலகக் கோப்பையை புறக்கணிக்கும் சாத்தியக்கூறுகள் தொடர்பாக, பாகிஸ்தானுக்கு எதிராக பன்னாட்டுக் கிரிக்கெட் பேரவை (ICC) கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த முடிவு முன்னெடுக்கப்பட்டால், இதுவரை இல்லாத அளவிலான கடுமையான தண்டனைகள் விதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரத்தை நன்கு அறிந்த வட்டாரங்களின் தகவலின்படி, போட்டியிலிருந்து விலகுவது உலக கிரிக்கெட் அரங்கில் பாகிஸ்தானின் நற்பெயரை கடுமையாக பாதிப்பதுடன், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு நீண்டகால நிதி மற்றும் கட்டமைப்பு ரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும்.





