பொலிஸ் உத்தியோகத்தர் அடாவடி: ரவிகரன் எம்.பி முறைப்பாடு
மக்களோடு இணைந்து பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுமென பாராளுமன்ற உறுப்பினரால் இதன்போது ஒட்டுசுட்டான் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டது.
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ்நிலயத்தில் கடமையாற்றும் ரொட்விக்கோ என்னும் பொலிஸ் உத்தியோகத்தர் மக்களோடு அடாவடித்தனமாகச் செயற்படுவதாக மக்களால் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தநிலையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஒட்டுசுட்டான் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியிடம் வலியுறுத்தியிருந்தார்.
அத்தோடு குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது நடவடிக்கை எடுக்கத்தவறினால் எதிர்வரும் சனிக்கிழமை (16-08-2025) ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக மக்களோடு இணைந்து பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுமென பாராளுமன்ற உறுப்பினரால் இதன்போது ஒட்டுசுட்டான் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டது.
குறித்த ரொட்விக்கோ என்னும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒட்டுசுட்டான் பொலிஸ்நிலையப்பிரிவிற்குட்பட்ட மக்கள்மீது பொய் குற்றங்களைப் பதிவுசெய்வது, மக்கள்மீது அத்துமீறித் தாக்குவது, மக்களுக்கு மனஉளைச்சல் ஏற்படும் வகையில் செயற்படுவது உள்ளிட்ட பல்வேறு அத்துமீறல் செயற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக மக்களால் நாடாளுமன்ற முறைப்பாடுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





