ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 7 இலங்கையர்கள்
இந்த இளைஞர் குழுவினர் அபுதாபியிலிருந்து எயார் அரேபியா நிறுவனத்துக்குச் சொந்தமான 3L-708 எனும் இலக்க விமானம் மூலம் 27 ஆம் திகதி இரவு 9.25 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்தனர்.
மத்திய கிழக்கு மோதல்களில் பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைத் தமது கைத்தொலைபேசிகளில் சேமித்து வைத்திருந்தமை மற்றும் அவற்றுக்கு 'லைக்ஸ்' இட்டு, பின்னூட்டங்களைப் பதிவிட்டவை போன்ற குற்றச்சாட்டுக்களின்கீழ் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பாதுகாப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கையைச்சேர்ந்த 7 இளைஞர்கள், அங்கிருந்து நாடுகடத்தப்பட்டு நாட்டை வந்தடைந்தனர்.
இந்த இளைஞர் குழுவினர் அபுதாபியிலிருந்து எயார் அரேபியா நிறுவனத்துக்குச் சொந்தமான 3L-708 எனும் இலக்க விமானம் மூலம் 27 ஆம் திகதி இரவு 9.25 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்தனர்.
மேற்குறிப்பிட்டவாறு ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இலங்கைக்குத் திருப்பியனுப்பிவைக்கப்பட்டவர்கள் அம்பலாங்கொடயைச் சேர்ந்த 29 வயதான இசுறு பிரதீப் டி சொய்சா, மாரப்பனவைச் சேர்ந்த நிலங்க நாமல் அபேவர்தன (23), பண்டாரகமவைச் சேர்ந்த கிஹான் தனுஷ்க (33), பொரளையைச் சேர்ந்த ஹேவகே கலன தசல ஜயரத்ன (23), பொரளையைச் சேர்ந்த மனோரத்ன ஆராச்சிகே இஷான் ஹர்ஷ பிரியந்த (27), பொன்னறுவையைச் சேர்ந்த ஷாஹின் அப்ரான் நிலவ்தீன் (25), வத்தளையைச் சேர்ந்த பஸ்லூன் நிஸார் அப்துல் நாசர் (32) ஆகியோர் என அடையாளங்காணப்பட்டுள்ளனர்.





