சீன உயர்மட்டக்குழு நாளை இலங்கைக்கு விஜயம்
நாளையதினம் வருகை தரும் சீன உயர்மட்டக்குழுவில் சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் தலைவர் ஷஜாவோ லெஜி தலைமையிலான உயர்மட்டக்குழுவினர் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சீனாவின் உயர்மட்டக்குழுவொன்று நாளையதினம் நாட்டுக்கு வருகை தரவுள்ளது.
குறித்த குழுவானது, நாளை மறுதினம் கொழும்பு ஷங்கிரில்லா ஹோட்டலில் நடைபெறும் 20ஆவது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் நான்காவது முழுமையான அமர்வு குறித்த விளக்கவுரையை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த வாரம் சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் உப தலைவர் வாங் டோங்மிங் தலைமையிலான சீன மக்கள் குடியரசின் உயர்மட்ட தூதுக்குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர்.
இந்நிலையில் நாளையதினம் வருகை தரும் சீன உயர்மட்டக்குழுவில் சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் தலைவர் ஷஜாவோ லெஜி தலைமையிலான உயர்மட்டக்குழுவினர் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த குழுவினரின் பங்கேற்புடன் 20ஆவது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் நான்காவது முழுமையான அமர்வு குறித்த விளக்கவுரை இலங்கையின் அரசியல் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய தரப்பினருக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





