சிசேரியனுக்குத் தேவையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு: எதிர்க்கட்சித் தலைவர்
ஆட்சிக்கு வரும்போது மருந்துப் பற்றாக்குறைக்கு நிலையான தீர்வுகளைப் பெற்றுத் தருவோம் என இந்த அரசாங்கம் கூறினாலும், இன்று இலவச சுகாதாரப் பராமரிப்பும் கல்வியும் வீழ்ச்சி கண்டு வருகின்றன.
சிசேரியன் அறுவைச் சிகிச்சைகளுக்கு தேவையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மொனராகலை மாவட்டத்தைச் சார்ந்த இம்முறை புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்களுடன் 14-08-2025 அன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மேற்கொள்ளப்படும் சிசேரியன் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதில் கடுமையான சிக்கல்கள் எழுந்துள்ளன. மயக்க மருந்து, மயக்க மருந்து பயன்பாட்டிற்கு பின்னர் தேவையான மருந்துகளுக்கு தாட்டுப்பாடு காணப்படுகின்றன.
ஆட்சிக்கு வரும்போது மருந்துப் பற்றாக்குறைக்கு நிலையான தீர்வுகளைப் பெற்றுத் தருவோம் என இந்த அரசாங்கம் கூறினாலும், இன்று இலவச சுகாதாரப் பராமரிப்பும் கல்வியும் வீழ்ச்சி கண்டு வருகின்றன.
இதுபோன்ற சூழ்நிலைக்கு மத்தியில், நாட்டு மக்களுடன் நாம் ஒன்று சேர்ந்து கொண்டு, அவர்களின் எண்ணங்களையும் விருப்பங்களையும் புரிந்துகொண்டு, மக்களுக்கு நம்மால் முடிந்த சிறந்த சேவைகளைச் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.





