Breaking News
நேபாள வெளிவிவகர அமைச்சருடன் அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்
இலங்கை சரியான உதவிகளை வழங்குவதை உறுதிசெய்யும் வகையில் தேவைப்படும் அனர்த்த முகாமை மையங்கள் இணைந்து நெருக்கமாகச் செயற்படுவதற்கு தயாராக உள்ளது.
நேபாளத்தில் வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட பேரழிவை தொடர்ந்து நிலவும் தற்போதைய சூழ்நிலை குறித்து, அந்நாட்டின் வெளிநாட்டமைச்சர் சிஷிர் கனாலுடன் பயனுள்ள தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: இலங்கை சரியான உதவிகளை வழங்குவதை உறுதிசெய்யும் வகையில் தேவைப்படும் அனர்த்த முகாமை மையங்கள் இணைந்து நெருக்கமாகச் செயற்படுவதற்கு தயாராக உள்ளது. எமது நெருங்கிய நண்பனும் அண்டை நாடுமான நேபாளத்திற்கு இலங்கை தனது முழுமையான ஆதரவையும் உறுதுணையையும் தொடர்ந்து வழங்கும் என்றுள்ளது.





