Breaking News
மருத்துவமனையில் இருந்த மனைவி கணவனால் குத்தி கொலை
சனிக்கிழமை விஸ்ருத்துடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கரூர் மாவட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 27 வயது பெண் ஞாயிற்றுக்கிழமை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
பட்டவர்த்தியைச் சேர்ந்த விஸ்ருத் என்பவரை மணந்த ஸ்ருதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சனிக்கிழமை விஸ்ருத்துடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மருத்துவமனைக்குள் நுழைந்த விஸ்ருத், மயக்க நிலையில் இருந்த ஸ்ருதியை 3 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதுகுறித்து குளித்தலைக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விஸ்ருத்தைத் தேடி வருகின்றனர்.