ரம்புக்வெலவின் வீட்டுப்பணிப்பெண்ணுக்கு விளக்கமறியல்
கெஹெலிய ரம்புக்வெலவின் இல்லத்தில் பணிப்பெண்ணாக இருந்த நிபுனி கிறிஷ்னஜினா ராஜபக்ஷ 12-06-2025 அன்று இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் இல்லத்தில் வீட்டுப்பணிப்பெண்ணாகப் பணியாற்றிய நிபுனி கிறிஷ்னஜினா ராஜபக்ஷவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு புதுக்கடை நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினால் சுகாதார அமைச்சுக்கு மேற்கொள்ளப்பட்ட முறைகேடான நியமனங்கள் ஊடாக அரச நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், அதனுடன் சம்பந்தப்பட்டிருக்கக்கூடும் எனும் சந்தேகத்தின்பேரில் கெஹெலிய ரம்புக்வெலவின் இல்லத்தில் பணிப்பெண்ணாக இருந்த நிபுனி கிறிஷ்னஜினா ராஜபக்ஷ 12-06-2025 அன்று இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.
2021 - 2023 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஊடக, சுகாதாரத்துறை மற்றும் சுற்றாடல் அமைச்சராகப் பதவி வகித்தபோது ஹெகெலிய ரம்புக்வெல அவரது அமைச்சுக்கான அதிகாரிகள் மற்றும் தனக்கான தனிப்பட்ட ஊழியர்கள் எனக் காண்பித்து போலியான நியமனங்களை வழங்கியதன் ஊடாக அரச நிதியை மோசடி செய்ததாக முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழு தற்போது விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றது.
இம்மோசடியின் விளைவாக அரசாங்கத்துக்கு சுமார் 8 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் இச்சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று கைதுசெய்யப்பட்டு, புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிபுனி ராஜபக்ஷவை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.





