எதிர்க்கட்சித்தலைவர் ஜனாதிபதிக்கு கடிதம்
குறித்த நிலையியற் கட்டளைகளை மீளாய்வு செய்து அவசியமான திருத்தங்களைச் பரிந்துரைப்பது பாராளுமன்றத்தின் பொறுப்பாகும்.
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படும் மகா சங்கத்தினர் மற்றும் ஏனைய மதகுருமார்களின் ஆடை விவகாரம் தொடர்பில் நிலவும் முரண்பாடுகளை களைந்து, அது குறித்த நிலையியற் கட்டளைகளை மீளாய்வு செய்வதற்காகப் பாராளுமன்றத்தின் 'நாட்டின் நல்லாளுமை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவை' உடனடியாகக் கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
பல்வேறு காரணங்களுக்காகச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படும் மகா சங்கத்தினர் மற்றும் இதர மதகுருமார்கள் சிறையிலிருக்கும் போதும், வெளியே அழைத்துச் செல்லப்படும் போதும் அணிய வேண்டிய ஆடை தொடர்பில் சிறைச்சாலைத் திணைக்களத்தின் 550 ஆம் இலக்க நிலையியற் கட்டளை பாரிய விவாதங்களையும் முரண்பாடுகளையும் தோற்றுவித்துள்ளது. இச்சமூகப் பிரச்சினைக்கு அரசாங்கம் துரித தீர்வு காணாமை மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நிலையியற் கட்டளைகளை மீளாய்வு செய்து அவசியமான திருத்தங்களைச் பரிந்துரைப்பது பாராளுமன்றத்தின் பொறுப்பாகும். இதற்காக சம்பந்தப்பட்ட துறைசார் மேற்பார்வைக் குழுவைக் உடனடியாகக் கூட்டுமாறு கோருகின்றோம்.
இக்குழுவின் முதல் கூட்டத்துக்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு, சிறைச்சாலை திணைக்களம், சட்ட மா அதிபர் திணைக்களம் தொடர்புடைய ஏனைய அனைத்துத் தரப்பினரும் அழைக்கப்பட வேண்டும்.
நான் இக்குழுவின் சாதாரண உறுப்பினராக இல்லாவிட்டாலும், இந்தப் பிரச்சினையின் தேசிய முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு குறித்த குழுக்கூட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றுத் தனது யோசனைகளையும் கருத்துகளையும் முன்வைக்க விரும்புகின்றேன். அதற்குரிய அனுமதியை வழங்குமாறும் கோருகின்றேன் என்றுள்ளது





