பணியை நிறைவு செய்த இந்திய இரண்டு ஹெலிகொப்டர்கள் குழு புறப்பட்டது
இந்திய எம்.ஐ 17 ஹெலிகொப்டர் கடந்த 2025 டிசம்பர் 8ம் திகதி நாட்டிற்கு வந்து மீட்பு பணிகள் மற்றும் அனர்த்த சேவை பணிகளில் ஈடுபட்டது. அந்த ஹெலிகொப்டரும் 14-12- 2025 அன்று பணிகளை நிறைவு செய்து நாட்டை விட்டு புறப்பட்டது.
அண்டை நாடான இந்தியாவின் இரண்டு ஹெலிகொப்டர்கள் அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக வேண்டியும் அவர்களுக்கான நிவாரணங்களை கொண்டு செல்வதற்காக வேண்டியும் இலங்கை வந்து பணியாற்றி மீண்டும் நாட்டை விட்டு புறப்பட்டது.
அதன் பின்பு இன்னுமொரு இந்திய எம்.ஐ 17 ஹெலிகொப்டர் கடந்த 2025 டிசம்பர் 8ம் திகதி நாட்டிற்கு வந்து மீட்பு பணிகள் மற்றும் அனர்த்த சேவை பணிகளில் ஈடுபட்டது. அந்த ஹெலிகொப்டரும் 14-12- 2025 அன்று பணிகளை நிறைவு செய்து நாட்டை விட்டு புறப்பட்டது.
நாடு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட எமக்காக உதவி கரம் நீட்டிய இந்திய மற்றும் அமெரிக்க விமானங்கள் மற்றும் மற்றும் பணியாளர்களை வழி அனுப்பி வைப்பதற்காக இலங்கை விமானப்படையின் தளபதி எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர மற்றும் சிரேஸ்ட விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் வருகை தந்து இருந்தனர். அமெரிக்க மற்றும் இந்திய பணியாளர்களுக்கு தங்களுடைய நன்றிகளையும் தெரிவித்து அவர்களை வழி அனுப்பி வைத்தனர்.





