புதிய செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தை வழிநடத்த மெட்டாவில் சாட்ஜிபிடியின் இணை படைப்பாளர் தலைமை விஞ்ஞானியாக நியமனம்
ஓபன்ஏஐ இல் ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணியாற்றிய ஜாவோ, ChatGPT, GPT-4 மற்றும் ஓபன்ஏஐ இன் மினி மாடல்கள் 4.1 மற்றும் o3 உள்ளிட்ட பல முக்கிய மாடல்களை இணைந்து உருவாக்கினார்.

சாட்ஜிபிடியின் இணை உருவாக்குநரான சென்ஜியா ஷோவை (Shengjia Zhao) சமீபத்தில் தொடங்கப்பட்ட சூப்பர் இன்டெலிஜென்ஸ் ஆய்வகத்தின் தலைமை விஞ்ஞானியாக மெட்டா நியமித்துள்ளது என்று மெட்டா நிறுவனம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
முன்பு ஓபன்ஏஐ இல் ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணியாற்றிய ஜாவோ, ChatGPT, GPT-4 மற்றும் ஓபன்ஏஐ இன் மினி மாடல்கள் 4.1 மற்றும் o3 உள்ளிட்ட பல முக்கிய மாடல்களை இணைந்து உருவாக்கினார்.
செயற்கை தரவுகள் குறித்த பணிகளுக்கும் அவர் தலைமை தாங்கினார். இப்போது, அவர் மெட்டாவின் செயற்கை நுண்ணறிவுப் பிரிவிற்கான ஆராய்ச்சி திசையை அமைப்பார் மற்றும் ஜுக்கர்பெர்க் மற்றும் மெட்டாவின் தலைமை செயற்கை நுண்ணறிவு அதிகாரியும் 'ஸ்கேல் ஏ.ஐ'யின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான அலெக்சாண்டர் வாங்க்.ஆகியோருடன் நேரடியாகப் பணியாற்றுவார்.