Breaking News
சிறிலங்காவுக்கு இன்றியமையாத முதலீடுகளை ஈர்ப்பதற்காக உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும்: பிரதமர் ஹரிணி
2025/2026 தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வு பிரதமர் தலைமையில் அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஒரு நாட்டின் அபிவிருத்தியானது அந்நாட்டுக்கு அந்நாட்டு மக்கள் வழங்கும் ஆக்கபூர்வமான பங்களிப்பிலேயே தங்கியுள்ளது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2025/2026 தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வு பிரதமர் தலைமையில் அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கல்வித் துறைக்கான போட்டியை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களும், அரச துறைக்கான போட்டியை கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியும், உற்பத்தி மற்றும் சேவைத் துறைக்கான போட்டியை ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் பொதுச் செயலாளர் கலாநிதி இந்திரா பிரதான் சிங்கவிதானவும் அறிவித்தனர்.