Breaking News
ஜம்முவில் கதுவா-உதம்பூர் எல்லையில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
துணை ராணுவப் படையினரும், காவல்துறையினரும் பசந்த்கரை அடைந்து அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவா-உதம்பூர் எல்லையில் உள்ள பசந்த்கரில் புதன்கிழமை நடைபெற்ற என்கவுன்டரில் குறைந்தது 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
நேற்று முன்தினம் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இப்பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்ததும், துணை ராணுவப் படையினரும், காவல்துறையினரும் பசந்த்கரை அடைந்து அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.
பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.