பலஸ்தீன் விடயத்தில் இரு அரசுத் தீர்வுக்கு இலங்கை வரவேற்பு
இந்த முக்கியமான முயற்சியில் தலைமை தாங்கியதற்காக சவுதி அரேபியா மற்றும் பிரான்சுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் இலங்கை குறிப்பிட்டுள்ளது.
பாலஸ்தீனப் பிரச்சினைக்கு, அமைதிக்கான தீர்வு மற்றும் இரு நாடுகள் தீர்வை செயற்படுத்துதல் குறித்த நியூயோர்க் பிரகடனத்தை ஆதரிக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஏற்றுக்கொண்டதை இலங்கை வரவேற்பதாக அறிவித்துள்ளது.
இந்த முக்கியமான முயற்சியில் தலைமை தாங்கியதற்காக சவுதி அரேபியா மற்றும் பிரான்சுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் இலங்கை குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் தொடர்புடைய ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு இணங்க, பலஸ்தீன மக்களின் அரச அந்தஸ்துக்கான மறுக்க முடியாத உரிமைக்கு, இலங்கை தனது அசைக்க முடியாத ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.