இலங்கையின் நம்பகரமான பங்காளியாக இந்தியா: உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா
இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள புனித தாதுக்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளமை குறித்தும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் நம்பகரமான பங்காளி மற்றும் என்றும் சார்ந்திருக்கக்கூடிய ஒரு பங்காளியாக இந்தியா 78 ஆவது சுதந்திர தின கொண்டாட்ட உணர்வைப் பகிர்ந்து கொள்கிறது என்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை மக்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து 04-02-2026அன்று எக்ஸ் பக்கத்தில் இட்டுள்ள பதிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பதிவில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நட்புறவையும் கலாச்சார பிணைப்பையும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் இந்தியாவும் ஒரு அங்கமாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டுள்ள அவர், "இலங்கையின் நம்பிக்கைக்குரிய மற்றும் என்றும் சார்ந்திருக்கக்கூடிய ஒரு பங்காளியாக இந்தியா இந்த கொண்டாட்ட உணர்வைப் பகிர்ந்து கொள்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள புனித தாதுக்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளமை குறித்தும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசேட தினத்தைக் கொண்டாடும் வகையில், இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க 'தேவ்னிமோரி' புனித புத்தர் தாதுக்களின் கண்காட்சி முக்கியத்துவமிக்கது என்று உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வானது இரு நாடுகளுக்கும் இடையிலான பௌத்த மத மற்றும் கலாசாரத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.





