திலித் ஜயவீர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சுகீஸ்வர பண்டார, மஹிந்த இடையூறளிப்பதாக முறைப்பாடு
கனம் நீதிவான் அவர்களே, இந்த விசாரணையுடன் தொடர்புடைய 14 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை நீதிமன்றில் சமர்ப்பிக்கின்றோம்.
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகள் தொடர்பில் திலித் ஜயவீர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சுகீஸ்வர பண்டார, மஹிந்த பத்திரான மற்றும் அசங்க நவரத்ன ஆகியோர் ஊடகங்கள் முன்னாள் தெரிவித்த கருத்துகள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்றைய தினம் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் இவ்விடயத்தினை தெரிவித்திருந்தது.
மேற்படி விடயம் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டள்ளன. பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 6 பேரும் உயிர்த ஞாயிறு பயங்கரவாத குண்டு தாக்குதல் விசாரணைக்கள் தொடர்பில் பொதுமக்களிடையே எதிர்ப்பினை தூன்டும் வகையில் செயற்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
கனம் நீதிவான் அவர்களே, இந்த விசாரணையுடன் தொடர்புடைய 14 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை நீதிமன்றில் சமர்ப்பிக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுதாக்குதல் சம்பவம் தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகளை திசைத்திருப்பும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும், இவ்வழக்கில் 3 ஆவது சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஸ் சலே இம்மாதம் 5 ஆம் திகதி இரவு முதல் உணவை தவிர்த்து வருகிறனர்.





