நான்கு இலட்சம் வேலை வாய்ப்புகள் வெளிநாட்டு ஊழியர்களை நியமிக்கும் நிலை - அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி
இத்திட்டத்தின் ஊடாக போதைப்பொருளுக்கு அடிமையாகி பின்னர் தகுந்த சிகிச்சை மற்றும் வழிகாட்டல்களின் கீழ் முழுமையாக புனர்வாழ்வளிக்கப்பட்ட எமது நாட்டு இளைஞர், யுவதிகளை தனியார் துறையில் நிரந்தரப் பணியாளர்களாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.
நாட்டின் தற்போது தனியார் துறையில் 4 இலட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புக்கள் காலியாக காணப்படுகிறது. இதனால் திறன்மிக்க மற்றும் திறனற்ற தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய காட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சில் 01-07-2026 அன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் இளைய தலைமுறையினரை போதைப்பொருள் ஆபத்துகளில் இருந்து பாதுகாத்து அவர்களை உற்பத்தி திறன்மிக்க பிரஜைகளாக மாற்றுவதை நோக்கமாக கொண்டு தேசிய அளவிலான புதிய வேலைத்திட்டமொன்று அதிகாரப்பூர்வமாக நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஊடாக போதைப்பொருளுக்கு அடிமையாகி பின்னர் தகுந்த சிகிச்சை மற்றும் வழிகாட்டல்களின் கீழ் முழுமையாக புனர்வாழ்வளிக்கப்பட்ட எமது நாட்டு இளைஞர், யுவதிகளை தனியார் துறையில் நிரந்தரப் பணியாளர்களாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.
மேலும், தற்போது நாட்டில் உள்நாட்டு தொழில்துறைத் துறைகளான கட்டுமானம், ஓடுகள் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி, மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி, காலணிகள் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 4 இலட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் காலியாக உள்ளது. உள்நாட்டில் நிலவும் திறன்மிக்க மற்றும் தினற்ற தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமாகவும், பொருளாதாரத்தை நிலைநாட்டவும் இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஊழியர்களை அமர்த்த வேண்டிய ஒரு கட்டாய நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்தும் பணியாளர்களை அமர்த்துவது போல் எமது நாட்டின் புனர்வாழ்வாளிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு அமைச்சின் நேரடி மேற்பார்வையின் கீழ் முறையான பயிற்சி திட்டங்களை வழங்கி உள்நாட்டு தொழிற்துறைகளில் நிலவும் பற்றாக்குறைக்கு நிலையான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றார்.





