Breaking News
ஜூன் சுற்றுலா பயணிகள் வருகை 100,000 ஐ தாண்டியது
இந்தியாவில் இருந்து மொத்தம் 32,977 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

ஜூன் மாதத்தில் இதுவரை மொத்தம் 116,469 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து மொத்தம் 32,977 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இது 28.3% ஆகும். அத்துடன், பிரித்தானியாவில் இருந்து 9,429 பேரும், சீனாவிலிருந்து 7,326 பேரும், பங்களாதேஷிலிருந்து 5,739 பேரும், அவுஸ்திரேலியாவில் இருந்து 5,736 பேரும் வந்துள்ளனர், 2025 ஆம் ஆண்டில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஜூன் மாதத்திற்கான சமீபத்திய புள்ளிவிபரங்களுடன் 1,146,272 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 237,037 பேர் இந்தியாவையும், 112,118 பேர் ரஷ்யாவையும், 105,703 பேர் இங்கிலாந்தையும் சேர்ந்தவர்கள்.