Breaking News
இந்தியா, பாகிஸ்தான் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: நாட்டு மக்களுக்கு சீனா அறிவுறுத்தல்
சீன குடிமக்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், இந்தியா அல்லது பாகிஸ்தானுக்கு பயணம் செய்யும் போது எச்சரிக்கையுடன் இருக்கவும் அந்த அறிக்கை அறிவுறுத்தியது.

சீனா தனது குடிமக்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
குளோபல் டைம்சின் கூற்றுப்படி, இரு நாடுகளிலும் உள்ள சீன தூதரகங்கள் வெள்ளிக்கிழமை பிற்பகல் சீன சமூக ஊடகத்தளமான வீசாட் கணக்குகளில் அறிக்கைகளை வெளியிட்டன.
சீன குடிமக்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், இந்தியா அல்லது பாகிஸ்தானுக்கு பயணம் செய்யும் போது எச்சரிக்கையுடன் இருக்கவும் அந்த அறிக்கை அறிவுறுத்தியது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கவும் ஏற்கனவே இந்தியா அல்லது பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு ஆலோசனை நினைவூட்டியது.