Breaking News
2024 ஆஸ்கார் விருதுகள்: ஆவணப்படத் திரைப்படப் பிரிவில் இந்தோ-கனடியன் தயாரிப்பான டு கில் எ டைகர்
அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் வியாழன் அன்று தேர்வுப்பட்டியலை அறிவித்தது.
இந்தோ-கனடிய திரைப்படத் தயாரிப்பாளரான நிஷா பஹுஜாவின் சமீபத்திய திட்டமான, டு கில் எ டைகர், 2024 ஆஸ்கார் விருதுகளுக்கான ஆவணப்படத் திரைப்படப் பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளது.
அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் வியாழன் அன்று தேர்வுப்பட்டியலை அறிவித்தது. முழுக்க முழுக்க இந்தியாவில் அமைக்கப்பட்ட இந்த ஆவணப்படம் கடந்த ஆண்டு ரொறன்ரோ பன்னாட்டுத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த கனடிய திரைப்படத்திற்கான ஆம்ப்ளிஃபை வாய்ஸ் விருதை வென்றது.
பஹுஜாவின் திரைப்படம் கிழக்கு இந்திய மாநிலமான ஜார்க்கண்டில் ஒரு இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்காக ஒரு குடும்பத்தின் துன்பகரமான பயணத்தை பதிவு செய்கிறது.





