ஐ.நா.பிரதிநிதிகள் குழுவுடன் நீதியமைச்சர் சந்திப்பு
குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் திருத்தங்களுக்கு அமைய உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதன் செயற்பாடுகள் குறித்த விழிப்புணர்வை நீதிபதிகளுக்கு ஏற்படுத்தி, அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று 22-06-2026 அன்று நீதி அமைச்சில் இடம்பெற்றது.
சிறுவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது சிறுவர்கள் காணொளித் தொழில்நுட்பம் ஊடாக சாட்சியமளிக்கும் வசதிகள், சிறுவர் மற்றும் இளைஞர்கள் கட்டளைச் சட்டம் மற்றும் சிறுவர்கள் தொடர்பான வழக்குகளை விரைவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
நீதிமன்றங்களில் இடம்பெறும் வழக்கு விசாரணைகளின் போது சிறுவர்களிடம் சாட்சியங்களைப் பெறும்போது காணொளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வசதி, குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் திருத்தங்களுக்கு அமைய உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதன் செயற்பாடுகள் குறித்த விழிப்புணர்வை நீதிபதிகளுக்கு ஏற்படுத்தி, அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான பொதுச் செயலாளரின் விசேட பிரதிநிதி கலாநிதி நஜாத் மாலா மஜீத், யுனிசெப் அமைப்பின் பிரதிநிதி எம்மா பிரிகாம், யுனிசெப் அமைப்பின் சிறுவர் பாதுகாப்பு விசேட வைத்திய நிபுணர் ஹேமமால் ஜயவர்தன மற்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.





