Breaking News
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இரவு 10:13 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் ஆழம் சுமார் 15.3 கிலோமீட்டர் என்று தெரிவிக்கப்பட்டது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, வடக்கு ஹாலிவுட்டிலிருந்து கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இரவு 10:13 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் ஆழம் சுமார் 15.3 கிலோமீட்டர் என்று தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, பர்பாங்க் மிதமான நடுக்கத்தை அனுபவித்தது. அதே நேரத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லாங் பீச் முழுவதும் இலேசான நடுக்கம் உணரப்பட்டது.