கேரள செவிலியருக்கு மரணதண்டனை விதிப்பு தொடர்பில் ஏமனுடன் பேசுவோம்: ஈரான்அறிவிப்பு
குடும்பத்தினரால் மன்னிப்பு பெறாவிட்டால், ஒரு மாதத்திற்குள் அவரது மரணதண்டனை நிறைவேற்றப்படும்.

ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியாவைச் சேர்ந்த நிமிஷா பிரியா விவகாரத்தை ஏமன் அரசிடம் எடுத்துச் செல்வதாகவும், இந்த விவகாரத்தில் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றும் ஈரான் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏமன் நாட்டைச் சேர்ந்த பெண்ணை கொலை செய்த வழக்கில் கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா என்பவருக்கு ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 30 அன்று, ஏமன் ஜனாதிபதி ரஷாத் அல்-அலிமி 2017 முதல் சிறையில் உள்ள நிமிஷா பிரியாவின் மரண தண்டனைக்கு ஒப்புதல் அளித்தார்.
நிமிஷா பிரியாவின் குடும்பத்திற்கு "சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்" என்று இந்தியா கூறியது. குடும்பத்தினரால் மன்னிப்பு பெறாவிட்டால், ஒரு மாதத்திற்குள் அவரது மரணதண்டனை நிறைவேற்றப்படும்.
"ஏமனில் நிமிஷா பிரியாவின் தண்டனை குறித்து நாங்கள் அறிவோம். நிமிஷா பிரியாவின் குடும்பத்தினர் பொருத்தமான விருப்பங்களை ஆராய்ந்து வருவதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்த விஷயத்தில் அரசாங்கம் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது" என்று வெளியுறவு அமைச்சக (எம்.இ.ஏ) செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.