அணுசக்தி அல்லாத புளோடார்ச் குண்டை சீன விஞ்ஞானிகள் சோதித்தனர்
சீனாவிலிருந்து வெளியாகும் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்ற செய்தித்தாள் இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சீனா அணுசக்தி அல்லாத புளோடார்ச் குண்டை வெற்றிகரமாக சோதித்துள்ளது. ஹைட்ரஜன் எரிபொருளை அடிப்படையாகக் கொண்ட அணுசக்தி அல்லாத குண்டை உருவாக்க சீன விஞ்ஞானிகள் கடந்த சில ஆண்டுகளாக சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சீன விஞ்ஞானிகள் சமீபத்தில் இந்தச் சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். இதற்கு அணுசக்தி அல்லாத புளோடார்ச் குண்டு என்று பெயரிட்டுள்ளனர். இந்த வெடிகுண்டால் ஏற்படும் தீப்பிழம்பு 2 வினாடிகளுக்கு மேல் நீடிக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர். சீனாவிலிருந்து வெளியாகும் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்ற செய்தித்தாள் இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த 2 கிலோ எடையுள்ள புளோடார்ச் குண்டு டிஎன்டியால் ஏற்படும் வெடிப்புகளை விட 15 மடங்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்று சீன விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.