நிலவின் மேல்பகுதியில் விழுந்து நொறுங்கிய லேண்டர் வாகனம் ?

திட்டமிட்டபடி சரியாக பயணித்த அந்த லேண்டர் வாகனம் , நிலவில் தரையிறங்க முற்பட்ட போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
ஜப்பானைச் சேர்ந்த ஐ ஸ்பேஸ் என்ற நிறுவனம் வடிவமைத்த லேண்டர் வாகனம் நிலவின் மேல்பகுதியில் விழுந்து உடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலவினை ஆராய உலகின் முதல் தனியார் நிறுவனமாக ஐ ஸ்பேஸ் என்ற நிறுவனம் அண்மையில் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. திட்டமிட்டபடி சரியாக பயணித்த அந்த நிலவு ஆராய்ச்சி வாகனம், நிலவில் தரையிறங்க முற்பட்டது. விஞ்ஞானிகள் ஆவலுடன் காத்திருந்தபோது, ஆராய்ச்சி வாகனமான லேண்டர் தரையிறங்க சற்று நேரம் இருந்தபோது தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதனால் லேண்டர் வாகனம் திட்டமிட்டபடி இறங்காமல் கீழே விழுந்து சிதறி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.இதுவரை ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே நிலவில் வெற்றிகரமாக தங்கள் ஆய்வு வாகனங்களை சரியாக தரையிறக்கியுள்ளது. முதல் முயற்சியிலேயே தோல்வியை தழுவியதால் ஐ ஸ்பேஸ் நிறுவன ஆய்வாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.