கனேடிய தமிழ் காங்கிரஸ் இனவாத, பிரிவினைவாதக் கோரிக்கைககளை முன்வைக்கிறது: விமல் வீரவன்ச குற்றச்சாட்டு
வடக்கில் பெறப்பட்ட அசாதாரண வாக்குகள் இனவாதத்திற்கு எதிரான வாக்கு மட்டுமல்ல, பிரிவினைவாதத்திற்கு எதிரான வாக்கு என தான் நம்புவதாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
கனடிய தமிழ் காங்கிரஸ் போன்ற அமைப்புகள் இனவாத, மத மற்றும் பிரிவினைவாத கோரிக்கைகளை முன்வைக்க முன்வந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
வடக்கில் பெறப்பட்ட அசாதாரண வாக்குகள் இனவாதத்திற்கு எதிரான வாக்கு மட்டுமல்ல, பிரிவினைவாதத்திற்கு எதிரான வாக்கு என தான் நம்புவதாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
"பிரிவினைவாத சார்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குப் பதிலாக மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி) உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தியைத் தேர்ந்தெடுத்ததன் மூலம், அந்தப் பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் இனவாதம் மற்றும் பிரிவினைவாதம் இரண்டையும் நிராகரிப்பதை நிரூபித்துள்ளனர்," என்று அவர் கூறினார்.
எனவே, கனேடியத் தமிழ் அமைப்புகள் போன்ற அமைப்புகளுக்கு சேவை செய்வதற்குப் பதிலாக, சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து மக்களினதும் அபிலாஷைகளை ஒன்றுபட்ட அரசுக்குள் சமமாக நிறைவேற்றுவதே இந்த அரசாங்கத்தின் ஆணை" என்று விமல் வீரவன்ச கூறினார்.